முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை தொடர்ந்து சரிவு: பவுன் ரூ.38 ஆயிரத்துக்கு கீழ் குறைந்து விற்பனை

செவ்வாய்க்கிழமை, 11 அக்டோபர் 2022      வர்த்தகம்
Gold 2022--10-05

Source: provided

சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்தது. தொடர்ச்சியாக 2 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. அதே நேரத்தில் தங்கம் விலை பல மாதங்களுக்கு பிறகு 38 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியுள்ளது. 

தங்கம் விலை கடந்த மாதங்களாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. சில நேரங்களில் அதிரடியாக உயர்ந்தும் வந்தது. அதே வேகத்திலும் குறைந்தும் வந்தது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,840க்கும், பவுன் ரூ.38,720க்கும் விற்பனையானது. ஞாயிற்றுக்கிழமை தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் சனிக்கிழமை விலையிலேயே தங்கம் விற்பனையானது.

ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு தங்கம் மார்க்கெட் நேற்று முன்தினம் தொடங்கியது. அதில் தங்கம் விலை குறைந்து காணப்பட்டது. காலையில் மட்டும் கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.4,805க்கும், பவுனுக்கு ரூ.280 குறைந்து ஒரு பவுன் ரூ.38,440க்கும் விற்கப்பட்டது. மாலையில் தங்கம் விலை மேலும் குறைந்தது. அதாவது, கடந்த சனிக்கிழமை விலையை விட கிராமுக்கு ரூ.65 குறைந்து ஒரு கிராம் ரூ.4,775க்கும், பவுனுக்கு ரூ.520 குறைந்து ஒரு பவுன் ரூ.38,200க்கும் விற்கப்பட்டது. இந்த அதிரடி விலை குறைவு நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.

இந்த நிலையில் நேற்றும் தங்கம் விலை குறைந்து காணப்பட்டது. நேற்று மட்டும் கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.4,740க்கும், பவுனுக்கு ரூ.280 குறைந்து ஒரு பவுன் ரூ.37,920க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. அதே நேரத்தில் தங்கம் விலை பல மாதங்களுக்கு பிறகு 38 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியுள்ளது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து