முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துப்பாக்கி குண்டுகள் முழங்க முலாயம் சிங் யாதவ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

செவ்வாய்க்கிழமை, 11 அக்டோபர் 2022      இந்தியா
Mulayam-Singh-Yadav 2022--1

Source: provided

லக்னோ : மறைந்த உ.பி. முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் உடல் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல் மந்திரியும், சமாஜ்வாடி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் உடல் நலக்குறைவு காரணமாக அரியானா குருகிராமில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று முன்தினம் காலை மரணம் அடைந்தார்.

இதையடுத்து முலாயம் சிங் யாதவ் உடல் மருத்துவமனையில் இருந்து சொந்த ஊரான உத்தரபிரதேச மாநிலம் எடாவா மாவட்டம் சைபைக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முலாயம் சிங் யாதவ் மறைவை கேள்விப்பட்டதும் மாநிலம் முழுவதிலும் இருந்து ஏராளமான சமாஜ் வாடி கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சைபை கிராமத்தில் திரண்டனர்.

அவர்கள் நீண்ட வரிசையில் காத்து இருந்து முலாயம் சிங் யாதவ் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் முலாயம் சிங் யாதவின் இறுதி சடங்கு சொந்த ஊரிலேயே நடைபெற்றது. பின்னர், அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லபட்டு முழு அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.

இறுதிச் சடங்கில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிகார் துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல் மந்திரி பூபேஷ் பாகல், பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், அவரது தயாரும் சமாஜவாதி எம்.பி.யுமான ஜெயா பச்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து