முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் 2,678 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு

வெள்ளிக்கிழமை, 14 அக்டோபர் 2022      இந்தியா
India-Corona 2022 03 15

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் நேற்று 2,678 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவின் பிடியில் இருந்து இதுவரை 4 கோடியே 40 லட்சத்து 68 ஆயிரத்து 557 பேர் மீண்டுள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 26,583 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 2,786 ஆக இருந்தது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை நேற்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,678 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 23 ஆயிரத்து 997 ஆக உயர்ந்தது.

கொரோனாவின் பிடியில் இருந்து இதுவரை 4 கோடியே 40 லட்சத்து 68 ஆயிரத்து 557 பேர் மீண்டுள்ளனர். இதில் நேற்று குணமாகி வீடு திரும்பிய 2,594 பேர் அடங்குவர். தற்போது 26,583 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனா பாதிப்பால் கர்நாடகாவில் 3 பேர், குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கத்தில் தலா ஒருவர் என 7 பேர் இறந்துள்ளனர். இதுதவிர கேரளாவில் விடுபட்ட 3 மரணங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 5,28,857 ஆக உயர்ந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து