முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த மோப்ப நாய் ‘ஜூம்’ உடலுக்கு ராணுவ அதிகாரிகள் அஞ்சலி..!

வெள்ளிக்கிழமை, 14 அக்டோபர் 2022      இந்தியா
Dog-Zoom 2022--10-14

காஷ்மீரில் தீவிரவாதிகளின் எதிர்ப்பு வேட்டையின்போது, தீவிரவாதிகளால் சுடப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த ராணுவ மோப்ப நாய் ‘ஜூம்’ உடலுக்கு ராணுவ அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

ஸ்ரீநகரின் பதாமி பக் கண்டோமென்டில் உள்ள சினார் போர் நினைவுச் சின்னம் அமைந்துள்ள இடத்தில் ஜூம் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதுகுறித்து, ஸ்ரீநகர் பகுதி ராணுவ செய்தித் தொடர்பாளர் கலோ.எம்ரான் முசவி கூறுகையில், "இந்திய ராணுவத்தின் ஆத்மார்த்தமான இந்த அஞ்சலி நிகழ்ச்சியில், சினார் போலீஸ் கமாண்டர் லெப்.ஜெனரல் ஏடிஎஸ் ஆவுஜ்லா மற்றும் பிற ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டு ஜூமின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அனந்தநாகின் டாங்பாவா என்ற கிராமத்தில் நடந்த தீவிரவாதிகள் தடுப்பு வேட்டையில் ஜூம் முக்கிய பங்காற்றியது. தீவிரவாதிகள் பதுங்கி இருந்த இடங்களைத் தேடி கண்டுபிடித்தது மட்டும் இல்லாமல், அவர்களில் ஒருவரை முடக்கியும் வைத்திருந்தது. குண்டுக் காயம் பட்டிருந்த போதிலும், மறைந்திருந்த இரண்டு தீவிரவாதிகளை அடையாளம் காட்டிய பின் இலக்குக்கு திரும்பி வரும்போது அதிக ரத்தப்போக்கு காரணமாக ஜூம் மயக்கமடைந்தது. ஜூமின் துரிதமான நடவடிக்கையால்தான் ராணுவ குழுவால் தீவிரவாதிகளைச் சுட்டுக்கொல்ல முடிந்தது.

சினார் வீரர்களில் ஒரு மதிப்புமிக்க உறுப்பினராக இந்த ராணுவ நாய் இருந்தது. தனது இரண்டு வயதில் பல தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் முன்னணியில் இருந்து செயல்பட்ட ஜூம் தனது துணிச்சலான செல்களால் தனித்து இருந்தது. சினார் காவலர்கள் ஒரு திறமையான வீரரை இழந்து விட்டனர்” என்று அவர் தெரிவித்தார்.

சினார் ராணுவ வீரர்கள் பிரிவு டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில், ராணுவ அதிகாரிகள் ஜூம் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். ஜூம் உடலக்கு அஞ்சலி செலுத்தும்போது 29-வது ராணுவ நாய் பிரிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து