முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தேர்தல் ஆணையம் திட்டம்

சனிக்கிழமை, 15 அக்டோபர் 2022      இந்தியா
Election-Commission 2022 09

தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்தி வருகிறது. இருப்பினும் தேர்தல்களில் சுமார் 70 முதல் 80 சதவீதம் வரையே ஓட்டுகள் பதிவாகிறது. பல்வேறு காரணங்களால் இன்னும் பல வாக்காளர்கள் ஓட்டு போடுவதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள்.

இந்நிலையில் தேர்தலில் வாக்களிக்காதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஓட்டுப்பதிவு அவசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இதுதொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியதாவது:- தேர்தலில் வாக்களிக்காத ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய நோடல் அதிகாரிகளை நியமிக்குமாறு 500-க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்ட தொழில் நிறுவனங்கள் மற்றும் துறைகளை கேட்டுக்கொண்டுள்ளோம்.

ஓட்டுப்பதிவு முடிந்த பிறகு இந்த அதிகாரிகள் வாக்களிக்காத ஊழியர்களை கண்டறிந்து அவர்களை அணுகுவார்கள். அப்போது 'தயவு செய்து அடுத்த முறை வாக்களிக்க முயற்சிக்கவும்' என்று கூறுவார்கள். இதுபோன்ற விழிப்புணர்வை நாங்கள் தொடங்குவோம். இதே போல வாக்களிக்காதவர்களுக்கு அவர்களின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாக்களிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நகர்ப்புறங்களில் ஓட்டுப்பதிவு குறைந்த இடங்களில் தீவிர கவனம் செலுத்தப்படும். மேலும் ஒவ்வொரு தொகுதியிலும் மிக குறைந்த வாக்குப்பதிவு கொண்ட வாக்குச்சாவடிகளில் கவனம் செலுத்துமாறு தேர்தல் அதிகாரிகளையும், மாவட்ட அதிகாரிகளையும் கேட்டு கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதுதவிர மாவட்ட தேர்தல் அலுவலர்கள் ஓட்டுப்பதிவு குறைந்த இடங்களுக்கு நேரில் சென்று அதற்கான காரணங்களை கண்டறிய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் வாக்காளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை நிவர்த்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து