முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் சட்டசபை தேர்தல்: 5-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி கட்சி

ஞாயிற்றுக்கிழமை, 16 அக்டோபர் 2022      இந்தியா
Kejriwal 2022--10-16

Source: provided

ஆமதாபாத் : குஜராத் சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சி 12 பேர் கொண்ட மற்றொரு வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. 

குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. வருகிற 2023-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதிக்குள் சட்டசபையின் பதவி காலம் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு நடைபெற உள்ள குஜராத் சட்டசபை தேர்தலில் இந்த முறை பா.ஜ.க. மற்றும் காங்கிரசுடன், ஆம் ஆத்மி கட்சியும் களத்தில் இறங்கியுள்ளது. 

குஜராத் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ஆம் ஆத்மி கட்சி 12 பேர் கொண்ட மற்றொரு வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது.  இது அக்கட்சியின் 5-வது வேட்பாளர் பட்டியல் ஆகும். குஜராத் தேர்தலுக்கு இதுவரை 53 வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து