முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் சற்று குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 16 அக்டோபர் 2022      இந்தியா
India-Corona 2022--10-09

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் புதிதாக 2,401 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா பரவல் சற்றே குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் புதிதாக 2,430 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்ட நிலையில் நேற்று சற்று குறைந்து 2,401 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,46,28,828 ஆக உயர்ந்துள்ளது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி 2,373 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா மீட்பு சிகிச்சையில் இருந்தோர் எண்ணிக்கை 28ஆயிரத்து 991 ஆக உயர்ந்துள்ளது. 

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை இப்போது 4,40,73,308- ஐ தொட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 21 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.

இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,28,895 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 26,625- ஐ எட்டியுள்ளது. இது மொத்த எண்ணிக்கையில் 0.06 சதவீதமாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து