முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கங்கை நதியில் ஆய்வு பணியின் போது நிதிஷ்குமார் சென்ற படகு விபத்தில் சிக்கியது

ஞாயிற்றுக்கிழமை, 16 அக்டோபர் 2022      இந்தியா
Nitish-Kumar 2022--10-16

Source: provided

பாட்னா : கங்கை நதியில் ஆய்வு பணியின் போது பீகார் முதல்வர் நிதிஷ்குமார் சென்ற படகு தொழில்நுட்ப கோளாறு காரணமாக தூணில் மோதியது. இந்த விபத்தில் முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் அதிகாரிகள் காயமின்றி தப்பினர். 

பீகார் மாநிலம் பாட்னா அருகே கங்கை நதியில் சாத் பூஜை நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு பூஜை நடைபெறும் இடத்தை நேரில் ஆய்வு செய்வதற்காக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் அதிகாரிகள் சென்றனர். அவர்கள் ஒரு படகில் சென்று கொண்டிருந்தனர்.

சாத்காட் பகுதியில் அவர்கள் படகில் இருந்த படி ஆய்வு செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று படகு பாட்னாவில் உள்ள ஜே.பி. சேது தூணில் மோதியது. படகில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த சம்பவம் நடந்தது. 

இதில் படகு லேசான சேதம் அடைந்தது. ஆனால் இந்த விபத்தில் முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் அதிகாரிகள் காயமின்றி தப்பினர். அதன்பிறகு அவர்கள் மற்றொரு படகில் சென்று ஆய்வு பணியை மேற்கொண்டனர். கங்கை புனித நதியில் சாத் பூஜையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடுவார்கள் என்பதால் இந்த ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து