முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மது விற்பனை உரிம முறைகேடு வழக்கு: இன்று ஆஜராக டெல்லி துணை முதல்வருக்கு சி.பி.ஐ. சம்மன்

ஞாயிற்றுக்கிழமை, 16 அக்டோபர் 2022      இந்தியா
Manish-Sisodia 2022--10-16

Source: provided

புதுடெல்லி : மது விற்பனை உரிம முறைகேடு வழக்கு தொடர்பாக இன்று காலை 11 மணிக்கு ஆஜராகும்படி புதுடில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு சி.பி.ஐ., சம்மன் அனுப்பியுள்ளது.

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. ஆம் ஆத்மி மூத்த தலைவரான மணிஷ் சிசோடியா துணை முதல்வராக உள்ளார். இவர், கலால் துறையையும் கவனித்து வருகிறார். தனியார் நிறுவனங்களுக்கும் உரிமம் வழங்கும் வகையில் மதுபான விற்பனை கொள்கையில், கடந்தாண்டு மாற்றம் செய்யப்பட்டது. இதில், சில தனியார் நிறுவனங்களுக்கு சலுகை காட்டப்பட்டதாகவும், இதனால் டெல்லி மாநில அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு டெல்லி துணை நிலை கவர்னர் உத்தரவிட்டார். அதன்படி, சிசோடியாவின் வீடு உட்பட 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகளும், மதுபான நிறுவனங்கள் குறித்த இடங்கள் என பல்வேறு மாநிலங்களிலும் அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் விசாரணைக்காக இன்று ஆஜராகும்படி மணிஷ் சிசோடியாவுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர். இது தொடர்பாக மணிஷ் சிசோடியா வெளியிட்ட அறிக்கையில், 

எனது வீடு, வங்கி லாக்கர், சொந்த கிராமத்தில் சி.பி.ஐ. சோதனை நடத்தியும் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போது, விசாரணைக்காக நாளை(இன்று) காலை 11 மணிக்கு தலைமை அலுவலகம் வரும்படி அழைத்துள்ளனர். நாளை(இன்று) நான் சென்று விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன் என்று கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து