முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷூ விமர்சனம்

திங்கட்கிழமை, 17 அக்டோபர் 2022      சினிமா
Shoe-review 2022--10-17

Source: provided

டைம் டிராவல் வகைப் பட வரிசையில் வந்திருக்கும் படம் ஷூ. இதன் முழுமையான தலைப்பு ரிபீட் ஷூ. ஒரு கால் ஷூ வை தரையில் உதைத்தால் பத்துநிமிடம் பின்னால் போகலாம் இன்னொரு ஷூவை உதைத்தால் பத்துநாட்கள் பின்னால் போகலாம் என்கிற மாதிரியான ஒரு ஷூவை கண்டுபிடிக்கிறார் திலீபன். அது சந்தர்ப்ப வசத்தால் யோகிபாபுக்கு கிடைக்கிறது. அதனால் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சொல்வதுதான் ஷூ படம். யோகிபாபு, ரெடின்கிங்ஸ்லி, கேபிஒய்.பாலா ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து பேசிப்பேசிச் சிரிக்கவைக்க முயல்கிறார்கள். டைம் டிராவல் ஷூ கிடைத்ததும் யோகிபாபு வாழ்வில் நடக்கும் அதிரடி மாற்றங்கள் சுவாரசியம். சிறுமி பிரியாகல்யாணின் பாத்திர வடிவமைப்பும் அதற்கு அவர் உயிர்கொடுத்திருக்கும் விதமும் நன்று. பள்ளிக்கூடம், செருப்பு தைக்கும் கடை ஆகிய இடங்களில் மட்டுமின்றி சிறைப்பட்டுத் தவிக்கும் நேரத்தில், அங்குள்ள அவ்வளவு பேருக்கும் தலைமை ஏற்கும் காட்சிகள் அனைத்திலும் ஈர்க்கிறார். பாடகர் ஆண்டனிதாசனுக்கு குடிகார வேஷம். அதில் பொருத்தமாக நடித்து கோபமூட்டியிருக்கிறார். இறுதியில், காலத்தால் பின்னோக்கிச் சென்று எல்லாம் சுபம் என முடியும்போது ஆறுதலாக இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து