முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காலங்களில் அவள் வசந்தம் இசை வெளியீடு

திங்கட்கிழமை, 17 அக்டோபர் 2022      சினிமா
Awa-Vasantham 2022--10-17

Source: provided

அறம் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஶ்ரீ ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் கலகலப்பான காதல் கதையாக உருவாகியுள்ள திரைப்படம் காலங்களில் அவள் வசந்தம்.  புதுமுகம் கௌஷிக் ராம் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். டாணாக்காரன் புகழ் அஞ்சலி நாயர் கதாநாயகியாக நடிக்கிறார். ஹெரோஷினி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு கோபி ஜகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, அறிமுக இசையமைப்பாளர் ஹரி இசையமைக்க, லியோ ஜான் பால் படத்தொகுப்பு செய்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரைப்பிரபலங்கள், படக்குழுவினர் முன்னிலையில் சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய, இயக்குநர் ராகவ் மிர்தாத், அன்பு தான் இந்தப்படத்தின் அடிப்படை. இந்தப்படத்தில் ஹரி மிக அற்புதமான இசையைத் தந்துள்ளார். இந்தப்படம் கல்யாணத்திற்குப் பிறகான காதலைச் சொல்லும் படம் மெச்சூரிட்டியை புரிந்து கௌஷிக் மிக அற்புதமாக நடித்திருக்கிறார். இந்தப்படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும் என்ற கூறினார்.  இப்படத்தை தமிழகமெங்கும் வி ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்ட் வெளியிடுகிறது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து