முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய தலைவர் டீஸர் வெளியீடு

திங்கட்கிழமை, 17 அக்டோபர் 2022      சினிமா
National-President 2022--10

Source: provided

இசைஞானி இளையராஜா இசையில், ஜெ.எம்.பஷீர் நடிப்பில் உருவாகியிருக்கும் "தேசிய தலைவர்" படத்தின் டீஸர் வெளியீட்டு விழா  வடபழனி ஏ.வி.எம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இப்படத்தின் டீஸரை படத்தின் நாயகன் பஷீர் தனது மொபைலில் வெளியிட்டார். இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் எஸ் எஸ் ஆர் கண்ணன் பேசியபோது, தனது அப்பா எஸ் எஸ் ராஜேந்திரன் முத்துராமலிங்க தேவருடைய நெருங்கிய நண்பர் என்றும் முத்துராமலிங்க தேவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது கூட பெண் செவிலியர் வேண்டாம் என ஒதுக்கிய போது அதற்காக ஆண் செவிலியரை ஏற்பாடு செய்தது தனது தந்தை என பெருமைப்படுத்தி பேசினார். இதன்பின் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் முன்னாள் தலைவர் நவமணி பேசிய போது, ஒரு மாற்று கருத்தை வெளியிட்டார். இதனை மேடையில் அமர்ந்திருந்து கேட்டுக்கொண்டிருந்த எஸ்எஸ்ஆர் கண்ணன் தன் தந்தை பற்றி அவதூறு செய்தியை பரப்புகிறார் என்று நவமணியுடன் மேடையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவரும் வரலாறு தெரியவில்லை என்று ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்ள, பின் எஸ்எஸ்ஆர் கண்ணன் விழாவில் இருந்து வெளிநடப்பு செய்தார். இந்த நிகழ்வு சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து