முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீபாவளிக்கு வெளியாகும் பேட்டைக்காளி

திங்கட்கிழமை, 17 அக்டோபர் 2022      சினிமா
Pettaikali 2022--10-17

Source: provided

வெற்றிமாறன் தயாரிப்பில் ராஜ்குமார் இயக்கத்தில் ஆண்டனி,கலையரசன்,கிஷோர்,ஷீலா ராஜ்குமார் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளது பேட்டைக்காளி. ஆஹா ஓடிடியில் வெப் தொடராக தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இதனை ஒட்டி ட்ரைய்லர் வெளியீடு விழா சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் சமீபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் பேட்டைக்காளி இய்குனர் ல.ராஜ்குமார் பேசுகையில், தமிழ் சினிமாவில் இதுவரை எந்த நாயகனும் பாய்ச்சல் மாட்டை பிடித்தது கிடையாது. ஆனால் ஆண்டனி மற்றும் கலையரசன் உண்மையான பாய்ச்சல் மாட்டை அடக்கினர். அந்த மாடுகளுடன் மட்டுமே படப்பிடிப்பு நடத்தினோம் என்றார். கதாநாயகன் ஆண்டனி பேசுகையில், மற்ற விளையாட்டு வீரர்களுக்கு உயிருக்கு உத்தரவாதம் இருக்கிறது ஆனால் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு மட்டுமே அது கிடையாது மற்ற விளையாட்டு வீரர்களுக்கு மதிப்பு கொடுத்ததும் இவர்களுக்கு கொடுக்கும் மரியாதையும் வித்தியாசமாக இருந்தது. அதோடு காவலர்கள் அவர்களை குச்சியால் அடித்தும், மரியாதை இன்றி  நடத்துவதும் ஆச்சரியமாகவும் வேதனைய‍கவும் இருந்தது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து