முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்லூரி, பல்கலைக்கழகங்களில் சைபர் பாதுகாப்பு பாடப்பிரிவுகளை துவங்க வேண்டும்: யு.ஜி.சி. உத்தரவு

வியாழக்கிழமை, 20 அக்டோபர் 2022      இந்தியா
UGC 2022- -10- 20

Source: provided

புதுடெல்லி: கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை அளவில் சைபர் பாதுகாப்பு பாடப்பிரிவுகளை தொடங்க பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.  

இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழங்களுக்கும் விடுத்துள்ள சுற்றறிக்கையில், இணையப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, அதனை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை அளவில் சைபர் பாதுகாப்பு பாடப்பிரிவுகளை தொடங்க வேண்டும் கேட்டுக்கொண்டுள்ளது.  மேலும், இந்த பாடத்திட்டமானது அதிக விழிப்புணர்வு, பாதுகாப்பான மற்றும் பொறுப்பான சைபர் பாதுகாப்பை உறுதி செய்யும் என பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து