முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்டிட கழிவுகளை பொது இடங்களில் கொட்டக் கூடாது: மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 21 அக்டோபர் 2022      இந்தியா
TN 2022-10-21

கட்டிடக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, 

இந்தியாவில் கட்டுமானக் கழிவுகளை கையாள, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் சார்பில் கடந்த 2016-ம் ஆண்டு கட்டுமானம் மற்றும் இடிப்பு கழிவு மேலாண்மை விதிகள் அமல்படுத்தப்பட்டது. கட்டுமான கழிவுகளை கையாளும் நடவடிக்கைகளின் போது நீர் தெளித்தல் அல்லது கழிவு அகற்றலை சீரமைத்தல் மூலம் கழிவுகள் ஈரப்படுத்தப்பட வேண்டும். கழிவுகளை சேமிப்பதற்காக, அதற்கென நியமிக்கப்பட்ட பகுதிகளை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் தினசரி 400 டன் திறன் கொண்ட கட்டுமானம் மற்றும் இடிப்பு கழிவுகளை செயல்படுத்துவதற்கான வசதிகளை சென்னை மாநகராட்சி ஏற்படுத்தியுள்ளது. எனவே கட்டுமான கழிவுகளை உள்ளாட்சி அமைப்பால் அடையாளம் காணப்பட்ட மற்றும் நியமிக்கப்பட்ட பகுதி தவிர, சாலைகள், நதிக்கரைகள், நீர்நிலைகள், ஒதுக்குப்புறமான பகுதிகள் போன்றவற்றில் கொட்டினால், அவர்களுக்கு எதிராக சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986 மற்றும் காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1981 (திருத்தப்பட்டது) விதிகளின்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து