முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 நாள் பயணமாக உத்தராகண்ட் சென்றார்: பிரதமர் நரேந்திர மோடி கேதார்நாத், பத்ரிநாத் கோயில்களில் வழிபாடு

வெள்ளிக்கிழமை, 21 அக்டோபர் 2022      இந்தியா
Modi 2022-10-21

Source: provided

டேராடூன் : 2 நாள் அரசு பயணமாக உத்தராகண்ட் மாநிலம் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள பிரசித்தி பெற்ற கேதார்நாத், பத்ரிநாத் கோயில்களில் வழிபாடு செய்தார்.

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக உத்தராகண்ட் மாநிலத்திற்குச் சென்றுள்ளார். நேற்று  (வெள்ளிக்கிழமை) காலையில் டேராடூனில் உள்ள இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜாலி கிராண்ட் விமானநிலையம் சென்ற பிரதமரை மாநில ஆளுநர் லெப்டினட் ஜெனரல் குர்மித் சிங், முதல்வர் புஸ்கர் சிங் தாமி, மத்திய அமைச்சர் அஜய் பட் ஆகியோர் சென்று வரவேற்றனர்.

பின்னர் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற கேதார்நாத் கோயிலுக்குச் சென்ற பிரதமர் மோடி அங்கு வழிபாடு செய்தார். வழிபாட்டின் போது, மலைவாழ் மக்களின் வெள்ளை நிற பாரம்பரிய உடை அணிந்திருந்தார். அதில் ஸ்வஸ்திக் முத்திரை எம்ராய்டரி செய்யப்பட்டிருந்தது. பிரதமர் ஆரோக்கியத்திற்காகவும், நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லவும் கோயில் பூசாரி வழிபாடு நடத்தினார். 

அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி, ஆதி குரு சங்கராச்சாரியாரின் சமாதிக்கு சென்று சிறிது நேரம் அங்கு இருந்தார். அதே போல் பத்ரிநாத் கோயிலுக்கும் சென்று பிரதமர் வழிபாடு நடத்தினார். வழிபாட்டின் போது பிரதமர் மோடி அணிந்திருந்த மலைவாழ் மக்களின் பாரம்பரிய உடையான வெள்ளை நிற "பஹடி" கையினால் செய்யப்பட்ட எம்ரியாடரி வேலைப்பாடு நிறைந்திருந்தது.

அது பிரதமர் சமீபத்தில் இமாச்சலப்பிரதேசம் சென்ற போது அவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அப்போது அதனைப் பெற்றுக் கொண்ட பிரதமர் ஆடையை வழங்கிய பெண்களிடம், தான் அடுத்ததாக செல்லும் முதல் மலைப்பிரதேச பயணத்தின் போது இந்த உடையை கட்டாயம் அணிவேன் என்று தெரிவித்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து