முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பருப்பு, வெங்காயம் உள்ளிட்ட தானியங்களின் விலை உயராது : மத்திய அரசு திட்டவட்டம்

வெள்ளிக்கிழமை, 21 அக்டோபர் 2022      இந்தியா
Central-government 2021 07

Source: provided

புதுடெல்லி : பருப்பு, வெங்காயம் உள்ளிட்ட தானியங்களின் விலை உயராது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் சில மாநிலங்களில் சமீபத்தில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்தது. இதுபோல பருப்பு உள்ளிட்ட தானியங்களின் விலையும் உயர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. இதுபற்றி மத்திய அரசின் நுகர்வோர் விவகாரபிரிவு செயலாளர் ரோகித் சிங் கூறியதாவது:-

இந்தியாவில் இப்போது பருப்பு உள்ளிட்ட தானியங்களின் கையிருப்பு போதுமான அளவு உள்ளது. இதன்காரணமாக இப்போதைக்கு தானியங்களின் விலை உயர வாய்ப்பு இல்லை. மத்திய அரசிடம் 2 லட்சத்து 50 ஆயிரம் டன் வெங்காயம் இருப்பு உள்ளது. தற்போது சில மாநிலங்களில் வெங்காயம் விலை உயர்ந்ததாக வந்த தகவலை அடுத்து அந்த மாநிலங்களுக்கு வெங்காயம் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது.

தக்காளி, வெங்காயம் போன்றவற்றை அதிக நாள் சேமித்து வைக்கமுடியாது. அழுகும் தன்மை கொண்டதால் அவற்றை உடனடியாக மார்க்கெட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டியதாக உள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு 2 கோடியே 72 லட்சம் டன் அளவுக்கு பருப்பு வகைகள் பயன்படுத்தப்படுகிறது. இதில் 2 கோடியே 50 லட்சம் டன் பருப்பு வகைள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. மீதியை தான் நாம் இறக்குமதி செய்கிறோம்.

இந்த ஆண்டு நம்மிடம் 43 லட்சம் டன் பருப்பு இருப்பில் உள்ளது. எனவே இப்போதைக்கு தட்டுப்பாடு ஏற்பட எந்த வாய்ப்பும் இல்லை. அப்படியே தேவை அதிகமாக ஏற்பட்டால் அதனை உடனடியாக கொள்முதல் செய்யவும் தயாராக உள்ளோம்.

இந்தியாவில் வெங்காயம் ஆண்டுக்கு 3 முறை அறுவடை செய்யப்படுகிறது. புதிய தொழில் நுட்பம் மூலம் வெங்காய உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் வெங்காய உற்பத்தியில் சுமார் 25 சதவீதம் அளவுக்கு வெங்காயம் வீணாகிறது. அதனை நீண்ட நாள் சேமித்து வைக்க முடியாது என்பதால் அவை சேதமாகி விடுகிறது. இதன் காரணமாகவே சில நேரங்களில் வெங்காயம் விலை உயர்கிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து