முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாரணாசியில் நவம்பர் 16 முதல் காசி தமிழ்ச்சங்கமம் நிகழ்ச்சி : மத்திய அமைச்சர்கள் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 21 அக்டோபர் 2022      இந்தியா
Murugan 2022-10-21

Source: provided

புதுடெல்லி : வாரணாசியில் நவம்பர் 16 முதல் காசி தமிழ்ச்சங்கமம் நிகழ்ச்சி நடைபெறும் என்று மத்திய அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான், இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:- பாரதிய பாஷா சமிதி (பி.பி.எஸ்.) என்கிற அமைப்பு தமிழ் கலாசாரத்துக்கும் காசிக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் பழைமையான தொடர்புகளை மீண்டும் கண்டறிந்து உறுதிப்படுத்தி கொண்டாடும் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் கார்த்திகை மாதம் அனைவரும் சிவனை வழிபட்டு விளக்குகளை ஏற்றுவர்.

அந்த மாதத்தையொட்டி இது நடைபெறுகிறது. இதற்கு மத்திய அரசும், உத்தரபிரதேச அரசும் உதவும். ஒரு மாத கால நிகழ்ச்சியாக 'காசி தமிழ்ச் சங்கமம்' வாராணசியில் (காசி) நவம்பர் 16-ந் தேதி முதல் டிசம்பர் 19-ந் தேதி வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியா நாகரிக இணைப்பின் சின்னம். இரண்டு வரலாற்று அறிவு மற்றும் கலாசார மையங்கள் மூலம் இந்தியாவின் ஒற்றுமையைப் புரிந்துகொள்ள காசி தமிழ்ச் சங்கமம் ஒரு சிறந்த தளமாக இருக்கும்.

பிரதமரின் 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற உணர்வின் கீழ் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் இரு பண்டைய வெளிப்பாடுகளின் பல்வேறு அம்சங்களில் வல்லுநர்கள் அறிஞர்கள் பங்கேற்கும் கல்விப் பரிமாற்றங்கள் கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் இடம்பெறும்.

இலக்கியம், பழங்கால நூல்கள், தத்துவம், ஆன்மிகம், இசை, நடனம், நாடகம், யோகா, ஆயுர்வேதம், கைத்தறி, கைவினைப் பொருள்கள் மற்றும் நவீன அறிவின் பல்வேறு அம்சங்கள் காசி தமிழ்ச்சங்கமத்தில் உள்ளடக்கியதாக இருக்கும். இதில் சென்னை ஐ.ஐ.டி., பனாரஸ் பல்கலைக்கழக நிபுணர்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து 12 குழுக்களில் தலா 210 பேர் பங்கேற்கிறார்கள். கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், சினிமா, இசை, தொழிலதிபர்கள், ஆதீனங்கள், கிராமப்புற பூசாரிகள் என 2,500 பேர் வரை இதில் பங்கேற்கிறார்கள் என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து