முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 'அக்னி பிரைம்' ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை

வெள்ளிக்கிழமை, 21 அக்டோபர் 2022      இந்தியா
Agni-Prime 2022-10-21

Source: provided

புவனேஸ்வர் : இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 'அக்னி பிரைம்' பாலிஸ்டிக் ஏவுகணை வெற்றிகரமாக நேற்று பரிசோதனை செய்யப்பட்டது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புதிய தலைமுறை நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணையான 'அக்னி பிரைம்' ஒடிசா கடற்கரையில் இருந்து நேற்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு(டி.ஆர்.டி.ஓ.) தெரிவித்துள்ளது.

இந்த ஏவுகணை நேற்று காலை 9.45 மணியளவில் ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட-எரிபொருள் ஏவுகணைக்கான அனைத்து சோதனைகளும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஏவுகணையின் பாதை பல்வேறு புள்ளிகளில் நிலைநிறுத்தப்பட்ட ரேடார்கள் மற்றும் டெலிமெட்ரி கருவிகள் மூலம் துல்லியமாக கண்காணிக்கப்பட்டது என்றும், ஏவுகணை தாக்கும் எல்லை 1,000 கி.மீ. முதல் 2,000 கி.மீ. வரை இருக்கும் என்று டி.ஆர்.டி.ஓ. தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து