முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிகாரிகளின் இடமாற்றம் குறித்த அறிக்கையை வழங்காதது ஏன்? குஜராத் தலைமை செயலருக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

சனிக்கிழமை, 22 அக்டோபர் 2022      இந்தியா
Gujarat 2022-10-22

அதிகாரிகளின் இடமாற்றம் குறித்த அறிக்கைகளை இதுவரை அனுப்பாதது ஏன் என்று விளக்கம் அளிக்க கோரி குஜராத் மாநில தலைமை செயலாளருக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. 

 குஜராத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. எனினும் இன்னும் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறை நடவடிக்கைகளை பின்பற்றி, குஜராத்தில் தங்கள் சொந்த மாவட்டங்களில் பணிபுரியும் அதிகாரிகளை உடனடியாக வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையம் குஜராத் மாநில தலைமை செயலாளருக்கும், காவல்துறை டி.ஜி.பி.க்கும் உத்தரவிட்டது. 

மேலும், கடந்த நான்கு ஆண்டுகளாக, ஒரே மாவட்டத்தில் மூன்று ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக பணிபுரிந்த அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. அத்துடன் இது குறித்த அறிக்கைகளை அனுப்ப செப்டம்பர் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு குஜராத் மாநில தலைமை செயலாளருக்கும், காவல்துறை டி.ஜி.பி.க்கும் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில், இதுவரை அதிகாரிகளின் இடமாற்றம் குறித்த அறிக்கைகளை அனுப்ப அவர்கள் தவறிவிட்டனர். ஆகவே குஜராத் மாநில தலைமை செயலாளரிடமும், காவல்துறை டி.ஜி.பி.யிடமும் தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து