முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு டெங்கு

சனிக்கிழமை, 22 அக்டோபர் 2022      சினிமா
Salman-Khan 2022-10-22

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு டெங்கு உறுதியாகி உள்ளதால், அவர் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். 

மகராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். வீட்டில் ஓய்வெடுத்து வந்த அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால் ஷூட்டிங் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கவில்லை.

மருத்துவர்களின் ஆலோசனைபடி தற்போது அவர் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். தற்போது டெங்கு பாதிப்பில் இருந்து படிப்படியாக குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  தனியார் தொலைகாட்சி சேனலில் பிரபல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அவர், தற்போதைக்கு பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மாற்றாக கரண் ஜோஹர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து