முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பவுனுக்கு ரூ. 600 அதிகரிப்பு

சனிக்கிழமை, 22 அக்டோபர் 2022      வர்த்தகம்
Gold 2022--10-05

தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 600 அதிகரித்துள்ளது. 

தீபாவளி பண்டிகையை பட்டாசு, இனிப்புகளுடன் தங்க நகை வாங்கியும் கொண்டாடுவது வழக்கம். தீபாவளிக்கு தங்கம் வாங்கி பூஜை செய்து கேதாரி நோன்பு இருந்தால் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. எனவே பொதுமக்கள் பலரும் தீபாவளிக்காக தங்கம் வாங்க முடிவு செய்திருந்தனர். அதற்கு ஏற்ற வகையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. இதனால் பெண்கள் தங்கம் வாங்குவதற்கான உற்சாகத்தில் இருந்தனர். 

இந்த நிலையில் நாளை தீபாவளி பண்கை கொண்டாடப்பட உள்ள நிலையில் தங்கம் விலை நேற்று  திடீரென்று பவுனுக்கு ரூ. 600 அதிகரித்துள்ளது. இதனால் தங்கம் வாங்க நினைத்திருந்த பெண்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 13-ம் தேதி பவுன் தங்கம் ரூ. 38,080-க்கு விற்கப்பட்டது. மறுநாள் அது ரூ.37,880 ஆக குறைந்தது. 15-ம் தேதி ரூ. 37,520 ஆனது. கடந்த வியாழன்று தங்கம் விலை ரூ.37,480 ஆக குறைந்தது. 

நேற்று முன்தினம் மீண்டும் குறைந்து ரூ.37,320-க்கு விற்கப்பட்டது. ஒரு வாரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்த தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.600 உயர்ந்திருப்பதால் தங்கம் வாங்க நினைத்திருந்த பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ. 37,920-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.4,665-க்கு விற்கப்பட்டது. நேற்று கிராமுக்கு ரூ.75 அதிகரித்து ரூ.4,740-க்கு விற்பனையானது.  இதே போல் வெள்ளி விலையும் நேற்று கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிராம் வெள்ளி ரூ. 61.50-க்கு விற்பனையானது. நேற்று கிராமுக்கு ரூ.1.70 அதிகரித்து ரூ. 63.20-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 63,200-ஆக இருந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து