முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழில்நுட்ப கோளாறால் முடங்கிய வாட்ஸ் அப் சேவை மீண்டும் சீரானது

செவ்வாய்க்கிழமை, 25 அக்டோபர் 2022      வர்த்தகம்
whatsapp 2022 10 25

தொழில்நுட்ப கோளாறால் நேற்று சிறிது நேரம் முடங்கிய வாட்ஸ் அப் சேவை மீண்டும் சீராகி செயல்பாட்டுக்கு வந்தது. 

வாட்ஸ்அப் மெசேஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.

உலக அளவில் வாட்ஸ்அப் மெசேஞ்சர் சேவை நேற்று பிற்பகலில் முடங்கியது. தொழிநுட்ப கோளாறு காரணமாக வாட்ஸ் அப் சேவை 12 மணி முதல் 2 மணி நேரமாக முடங்கியதாக தகவல் வெளியானது. வாட்ஸ்அப் மெசேஞ்சரை பயன்படுத்திய பயனர்கள் தகவல் பரிமாற முடியாமல் தவித்தனர்.  இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் வாட்ஸ்-அப் சேவை முடங்கியதால் பயனாளர்கள் தவித்தனர். இதனால் வாட்ஸ்அப் பயனர்களால் செய்திகளை அனுப்பவோ பெறவோ முடியவில்லை. 

இந்த நிலையில் வாட்ஸ்அப் மற்றும் அதன் தாய் நிறுவனமான மெட்டா தரப்பில் விரைவில் வாட்ஸ் அப் கோளாறு சரிசெய்யப்படும் என்று உறுதியளித்து இருந்தது. இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறால் பகல் 12 மணி முதல் 2 மணி நேரமாக முடங்கிய வாட்ஸ் - ஆப் சேவை இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் சீராகி பயன்பாட்டுக்கு வந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து