முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார்தியின் சர்தார் விமர்சனம்

புதன்கிழமை, 26 அக்டோபர் 2022      சினிமா
Sardar-2022-10-26

கார்த்தி நடிப்பில் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் சர்தார். இப்படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். மேலும், லைலா, ரஜிஷா விஜயன், ராஷி கன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கதை, கார்த்தியின் தந்தை ராணுவத்தில் உளவாளியாக இருக்கிறார். அவர் தேசத்துரோகி என்ற அரசின் அறிவிப்பால் அவருடைய குடும்பம் தற்கொலை செய்து கொள்கிறது. மகன் கார்த்தியை அவருடைய சித்தப்பா முனீஸ்காந்த் வளர்த்து போலீஸ் அதிகாரியாக ஆக்குகிறார். இந்நிலையில் கார்த்தியிடம் வழக்கு ஒன்று கிடைக்கிறது. அந்த வழக்கு அவரது அப்பா சர்தாரிடம் செல்கிறது. சர்தார் ஏன் தேசத்துரோகியாக அறிவிக்கப்பட்டார் என்பதே படத்தின் கிளைமாக்ஸ். அப்பா, மகன் என இரு வேடங்களிலும் கார்த்தி நடிப்பில் அசத்தியுள்ளார். அவருடன் இணைந்து நடித்துள்ள ஒவ்வொருவருக்குமே கதையில் முக்கியத்துவம் இருக்கிறது. ஒரு ரா ஏஜென்ட் என்னவெல்லாம் செய்து விட முடியுமோ அதனை நம் கற்பனைக்கு எட்டாத பல விஷயங்களையும் காட்சிகளால் நமக்கு புரிய வைத்துள்ளார் இயக்குனர் மித்ரன். 1980-களில் நடைபெறும் பிளாஷ்பேக் காட்சிகள் அருமை. ரித்விக், லைலா, ராஷிகண்ணா, ரஷிதா விஜயன் ஆகியோரின் நடிப்பும் ஜிவி பிரகாஷின் பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. மொத்தத்தில் சர்தார் தீபாவளி விருந்து.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து