முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரின்ஸ் விமர்சனம்

புதன்கிழமை, 26 அக்டோபர் 2022      சினிமா
Prince-2022-10-26

சிவகார்த்திகேயன் நடிப்பில் அனுதீப் இயக்கத்தில் தீபாவளி திரைப்படமாக வெளியாகி உள்ள படம் பிரின்ஸ். இப்படத்தில் சிவாவுடன் மரியா, சத்யராஜ், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கதை, ஒரு பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார் சிவகார்த்திகேயன், அந்த பள்ளிக்கு புதிதாக சேரும் பிரிட்டிஷ் ஆசிரியை மீது காதல் கொள்கிறார். சிவகார்த்திகேயனின் குடும்பம் சுதந்திரப் போராட்ட குடும்பம் என்பதால் அவரின் அப்பா சத்யராஜ் பிரிட்டிஷ் பெண்ணை காதலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இறுதியில் இருவரும் இணைந்தார்களா என்பதுதான் படத்தின் கதை. மிகவும் எளிமையாக இந்த கதையை  தன்னுடைய ஸ்டைலில் சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குனர் அனுதீப். உக்ரைன் நடிகையான மரியா இந்த படத்தில் சிறப்பாகவே நடித்துள்ளார். படத்தில் சத்யராஜின் காமெடிகள் பல இடங்களில் ரசிக்க வைக்கிறது. பாரத், சதீஷ், ராகுல், பிரேம்ஜி ஆகியோர் நல்ல நடிப்பை கொடுத்துள்ளார். தமன் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது. படமும் முழுக்க காமெடியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. கதை மற்றும் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் சேர்த்து இருந்தால் படம் அருமையாக இருந்திருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து