முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்கும் பணியில் அரசு தீவிரம்: குஜராத்தில் பிரதமர் மோடி பேச்சு

சனிக்கிழமை, 29 அக்டோபர் 2022      இந்தியா
modi-2022-09-01 (2)

நாடு முழுவதும் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக மத்திய அரசு பணியாற்றி வருவதாக குஜராத் வேலைவாய்ப்பு முகாமில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். 

குஜராத்தில் நேற்று நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் காணொளி மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையில் பேசியதாவது., பல்வேறு நிலைகளில் உள்ள வெவ்வேறு பணியிடங்களுக்கான நியமனக் கடிதங்களைப் பெற்றுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு மோடி வாழ்த்து தெரிவித்தார். குஜராத் மாநிலம் விரைவாக முன்னேறி வருதாகவும், குஜராத் பஞ்சாயத்து சேவை வாரியத்தில் இருந்து 5000 பேருக்கும், குஜராத் துணை ஆய்வாளர் நியமன வாரியம் மற்றும் லோக்ரக்ஷக் நியமன வாரியத்தில் இருந்து 8000 பேருக்கும் பணி நியமன கடிதங்கள் அளிக்கப்படுவதாகவும், துரித நடவடிக்கையை மேற்கொண்ட குஜராத் முதல்வர் மற்றும் அவரது குழுவினருக்கும் பாராட்டு தெரிவித்தார். 

அண்மை காலங்களில் குஜராத் மாநிலத்தில் 10,000 இளைஞர்களுக்கு பணி நியமன கடிதங்கள் வழங்கப்பட்டிருப்பதோடு அடுத்த ஓராண்டில் 35,000 இடங்களை நிரப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார். குஜராத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகளும், சுய வேலைவாய்ப்புகளும் உருவாவதற்கு மாநிலத்தின் புதிய தொழில்துறை கொள்கை தான் முக்கிய காரணம். 

ஓஜாஸ் போன்ற டிஜிட்டல் தளங்களையும், குரூப் 3 மற்றும் 4-ஆம் நிலை இடங்களுக்கான நேர்முகத் தேர்வு முறை நீக்கப்பட்டிருப்பதை பாராட்டிய மோடி, “அனுபந்தம்” செல்பேசி செயலி மற்றும் வேலைவாய்ப்பு இணையதளம் முதலியவற்றின் வாயிலாக மாநிலத்தில் வேலை தேடுபவர்களும், பணியமர்த்தும் நிறுவனங்களும் சுமூகமாக இணைக்கப்படுகின்றன. அதேபோல குஜராத் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் விரைவான பணி நியமன மாதிரி தேசிய அளவில் பாராட்டப்படுகிறது.

மேலும், இதேபோன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் வரும் மாதங்களில் தேசிய மற்றும் மாநில அளவுகளில் தொடர்ந்து நடத்தப்படும். 10 லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக மத்திய அரசு பணியாற்றி வரும் வேளையில், மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இந்தப் பிரசாரத்தில் இணைந்து செயல்படுவதன் மூலம் வேலைவாய்ப்பு எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு உயரும். “கடை கோடியில் உள்ளவரையும் அரசின் திட்டங்களின் பலன்கள் முழுமையாக கிடைப்பதையும் இது உறுதி செய்யும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து