முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்திரிக்கையாளர்களுக்கு தீபாவளி பரிசாக லஞ்சம்: பா.ஜ.க. மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 29 அக்டோபர் 2022      இந்தியா
Cong 2022-10-29

தீபாவளி பரிசாக பத்திரிக்கையாளர்களுக்கு ரூ.1 லட்சம் லஞ்சமாக கொடுக்க கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை முயற்சித்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

பத்திரிக்கையாளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும், அவர் முதல்வர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்ய வேண்டும் எனவும் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது: கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பத்திரிக்கையாளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்தது இதன் மூலம் தெளிவாகிறது. இந்த முறை முதல்வர் நேரடியாக பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி செய்தது அம்பலமாகியுள்ளது. அவர் கர்நாடகத்தில் உள்ள ஒவ்வொரு பத்திரிக்கையாளருக்கும் 1 லட்சம் ரூபாய் தீபாவளி பரிசு என்ற பெயரில் லஞ்சமாக கொடுக்க முயற்சி செய்துள்ளார். இதனை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பத்திரிக்கையாளர்களுக்கு தலை வணங்குகிறேன்.

பசவராஜ் பொம்மை தலைமையிலான கர்நாடக அரசு லஞ்சம் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது இது முதல்முறையல்ல.  பத்திரிக்கையாளர்களுக்கு இவ்வாறு லஞ்சமளிக்க முதல்வருக்கு எங்கிருந்து பணம் வருகிறது. மக்களின் பணத்தை லஞ்சமாக பாஜக அரசு வழங்க முயற்சிக்கிறது. முதல்வர் பசவராஜ் பொம்மை இந்த குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியிலிருந்து பதவி விலக வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து