முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காலங்களில் அவள் வசந்தம் விமர்சனம்

ஞாயிற்றுக்கிழமை, 30 அக்டோபர் 2022      சினிமா
She-Vasantham-review 2022-

Source: provided

வருடத்துக்கு ஒரு பெண்னைக் காதலித்துக் கொண்டிருக்கும் நாயகனுக்கு ஒரு நாள் திடீரென கல்யாணம் ஆகி,கிறது. கல்யாணத்துக்குப் பிறகு மனைவியைத் தீவிரமாகக் காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் உன்னுடையது காதலே இல்லை என்று மனைவி சொல்கிறார். அதிர்ந்து போகும் அவர், அதற்குப் பின் என்ன முடிவெடுக்கிறார் இறுதியில் என்னவாகிறது என்பதைச் சொல்லியிருக்கும் படம் காலங்களில் அவள் வசந்தம். நாயகன் கெள்ஷிக்ராம் புதுவரவு. காதல், ஆட்டம், பாட்டம் ,சோகம் ஆகிய அனைத்திலும் தேர்வாகிறார். நாயகி அஞ்சலிநாயர். அமைதியான அழகில் ஈர்ப்பதோடு, கணவனின் அன்புக்கு ஏங்கும் காட்சிகளில் கலங்க வைக்கிறார். இன்னொரு நாயகி ஹொரோசினி அப்பாவியான அழகி. அதற்கேற்ப நடித்து காட்சிகளுக்குப் பலம் சேர்க்கிறார். விக்னேஷ்காந்த், அனிதா சம்பத், சுவாமிநாதன் ஆகியோரின் நடிப்பும் அருமை. கோபிஜெகதீசுவரன் ஒளிப்பதிவு சிறப்பு. ஹரியின் இசை கேட்கும் ரகம். லியோ ஜான்பாலின் படத்தொகுப்பு படத்தின் சுவாரசியத்தைக் கூட்டியிருக்கிறது. இயக்குநர் ராகவ் மிர்தாத் காதலுக்குப் புதிய விளக்கவுரை எழுதியிருக்கிறார். படம் நெடுகப் பயணிக்கும் பட்டாம்பூச்சி இயக்குநரின் கற்பனைத் திறனுக்குச் சான்று. நீ நீயாக இரு என்கிற சிந்தனை படத்துக்குப் பலம். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து