முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிவின்பாலியின் படவெட்டு விமர்சனம்

ஞாயிற்றுக்கிழமை, 30 அக்டோபர் 2022      சினிமா
Nivinpali-Film-review 2022-

Source: provided

எப்போதும் சோம்பேறித்தனமாகப் படுத்துக் கொண்டிருக்கிறார் நிவின்பாலி. ஓட்டப் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்தால் வாழ்க்கை முடங்கிப்போகிறது. அதிலிருந்து அவர் மீண்டாரா? அவருடைய இயலாமை எப்படிப்பட்ட விளைவுகளையெல்லாம் ஏற்படுத்துகின்றன என்பதை அழுத்தந்திருத்தமாய் சொல்லியிருக்கிறது படவெட்டு படம். என்ன இது நிவின்பாலி இப்படி ஒரு வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாரே? என்று நினைக்க வைக்கிறது முக்கால்வாசிப்படம். இறுதியில் அவர் எடுக்கும் விஸ்வரூபம் எல்லாவற்றையும் நேர்மறையாக்கிவிடுகிறது.அமைதியாக அதேசமயம் ஆழமான அவருடைய நடிப்பு படத்துக்குப் பெரும்பலமாக அமைந்திருக்கிறது.சோர்ந்திருக்கும் நிவின்பாலியை ஊக்கப்படுத்துவதற்காகவே நாயகி அதிதிபாலன் இருக்கிறார். கண்களிலேயே அவர் வெளிப்படுத்தும் உணர்வுகள் சிறப்பு.அரசியல்கட்சித் தலைவராக வருகிறார் ஷம்மிதிலகன். அவருடைய அப்பா திலகனுக்கு இணையாக நடிப்பில் மிரட்டுகிறார். தீபக்மேனனின் ஒளிப்பதிவும் கோவிந்த்வசந்தாவின் இசையும் படத்தின் மதிப்பை உயர்த்துகிறது. லிஜுகிருஷ்ணா எழுதி இயக்கியிருக்கிறார். பரப்புரை தொனியில்லாமல் ஆதிக்கச் சக்திகள் எப்படி இயற்கையையும் மண்வளத்தையும் கொள்ளையடிக்கின்றன என்பதை ஷம்மி திலகனின் தொழிலை வைத்துச் சொல்லியிருக்கிறார். பாஜகவின் சதிகளை அப்பட்டமாகத் தோலுரிக்கும் வகையில் வெளியாகியுள்ள இந்தப்படத்தைத் தமிழில் மொழிமாற்று செய்து வெளியிட்டால் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து