முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆற்றல் மிக்க நாடாக இந்தியா உருவாக மாணவர்களின் சக்தியே அடிப்படை மான் கீ பாத்தில் பிரதமர் மோடி பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 30 அக்டோபர் 2022      இந்தியா
Modi 2022-10-30

Source: provided

புது டெல்லி ; இந்தியாவை ஆற்றல் வாய்ந்த நாடாக உருவாக்குவதற்கு மாணவர்களின் சக்தியே அடிப்படையாக உள்ளது என பிரதமர் மோடி பேசினார். 

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக் கிழமையில் வானொலி மூலம் மான் கீ பாத் என்ற நிகழ்ச்சியில் பேசி வருகிறார். அந்த வகையில், நேற்று நடந்த மான் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது, 

இந்திய தொழிற்சாலைகள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் நுட்பங்களை விண்வெளி துறையில் கொண்டு வருகின்றன. இந்திய இளைஞர்களுக்கு விண்வெளி துறையின் வாய்ப்புகளை திறந்து விட்ட பின்னர், அவற்றில் புரட்சிகர மாற்றங்கள் வர தொடங்கியுள்ளன. இந்தியாவை ஆற்றல் வாய்ந்த நாடாக உருவாக்குவதற்கு மாணவ,மாணவியர்களின் சக்தியே அடிப்படையாக உள்ளது. 

இன்றைய இளைஞர்கள் தங்களது திறமையால், வருகிற ஆண்டுகளில் நாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வார்கள். சுற்றுச்சூழலை நோக்கிய உணர்வு திறனுடன் இருப்பது நமது வாழ்க்கைக்கான வழியாகும். சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறைகளை பற்றி மக்கள் சமீப காலங்களில் அதிக விழிப்புணர்வுடன் உள்ளனர். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பொருட்களை பற்றிய எச்சரிக்கை உணர்வும் சமீப காலங்களில் நம்முடைய மக்களிடம் அதிகரித்து காணப்படுகிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து