முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோலார் சக்தி மூலம் பயன்: காஞ்சிபுரம் விவசாயிக்கு பிரதமர் மோடி பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை, 30 அக்டோபர் 2022      இந்தியா
modi-2022-09-01 (2)

Source: provided

புது டெல்லி ; தமிழகத்தின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த எழிலன் என்ற விவசாயி, பிரதமர் குஷூம் யோஜனா திட்டத்தின் பயனை அடைந்துள்ளார். அவரது பண்ணையில் 10 குதிரைத்திறன் கொண்ட சோலார் பம்ப் செட்டை அமைத்துள்ளார் என்று மான் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். 

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி மூலம் மான் கீ பாத் நிகழ்ச்சியில் பேசி வருகிறார். அந்த வகையில், நேற்றைய மான் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: 

சூரிய சக்தியில் உலகளவில் இந்தியா முன்னிலையில் உள்ளது. சூரிய சக்தியை இந்தியா பெரிய அளவில் பயன்படுத்துகிறது. இன்று நாம் மிகப்பெரிய சூரிய சக்தியை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக மாறி விட்டோம். சோலார் சக்தி மூலம் பயன்பணத்தை மிச்சப்படுத்த முடியும். தமிழகத்தின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த எழிலன் என்ற விவசாயி, பிரதமர் குஷூம் யோஜனா திட்டத்தின் பயனை அடைந்துள்ளார். அவரது பண்ணையில் 10 குதிரைத்திறன் கொண்ட சோலார் பம்ப் செட்டை அமைத்துள்ளார். 

இதன்மூலம் அவர் பண்ணையில் விவசாயத்திற்கு என எதுவும் செலவு செய்வது கிடையாது. விவசாய நிலத்தில் பாசனம் செய்ய அரசின் மின் விநியோகத்தை அவர் நம்பியிருக்கவில்லை. இதே போல் சூரிய சக்தி மூலம் பலர் பயனடைந்துள்ளனர். குஜராத்தின் மோதிரா பகுதியில் பெரும்பாலான வீடுகளில் சோலார் எரிசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அங்குள்ள மக்கள் சூரிய சக்தி மூலம் மின்சாரத்தைப் பயன்படுத்துவது மட்டுமின்றி, அதன் மூலம் வருமானமும் பெறுகிறார்கள். சூரிய மின்சக்தி போல் விண்வெளித் துறையிலும் இந்தியா பல சாதனைகளை படைத்துள்ளது. இந்தியாவின் சாதனைகளை உலகம் ஆச்சர்யத்துடன் பார்க்கிறது என தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து