முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் நெகிழ்ச்சி சம்பவம்: ராணுவ பயிற்சியை நிறைவு செய்தார் உயிரிழந்த அதிகாரியின் மனைவி

ஞாயிற்றுக்கிழமை, 30 அக்டோபர் 2022      இந்தியா
Harveen-Kaur 2022-10-30

Source: provided

சென்னை : சென்னை பயிற்சி அகாடமியில் பயிற்சியை நிறைவுசெய்த ஹர்வீன் கவுர் கஹ்லோன் என்ற பெண்மணி உயிரிழந்த ராணுவ அதிகாரியின் மனைவி ஆவார். அவரது கணவர் உயிரிழந்தபோது ஹர்வீன் கவுர் 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு இப்போது ஒரு மகன் உள்ளான். நீண்ட நாட்களுக்கு பின் தனது தாயாரை ஆசையாய் காண வந்த தனது பிஞ்சு குழந்தையை, அவர் தூக்கி கொஞ்சிய காட்சி வைரலாகி வருகிறது.

சென்னையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் ராணுவ பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கான இறுதிநாள் அணிவகுப்பு நடந்தது. ராணுவ பயிற்சியை நிறைவு செய்து பட்டம் பெற்ற 186 இந்திய வீரர்களும் இறுதிநாள் அணிவகுப்பு நடத்தினர். இந்த நிலையில், பயிற்சி அகாடமியில் பயிற்சியை நிறைவுசெய்த ஹர்வீன் கவுர் கஹ்லோன் என்ற பெண்மணி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 28 வயதான ஹர்வீன் கவுர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்.

இவர் அம்மாநிலத்தில் உள்ள ஒரு சர்வதேச பள்ளியில் வேதியியல் ஆசிரியராக இருந்தார். இவர் வீரமரணம் அடைந்த முன்னாள் ராணுவ அதிகாரியின் மனைவி ஆவார். அவரது கணவர் மேஜர் கஹ்லோன் 2019-ல் ராணுவ பணியின்போது வீரமரணம் அடைந்தார். அவரது கணவர் உயிரிழந்தபோது ஹர்வீன் கவுர் 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு இப்போது ஒரு மகன் உள்ளான்.

இந்த நிலையில், ஹர்வீன் கவுர் கஹ்லோன் சென்னையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் பயிற்சியை நிறைவு செய்துள்ளார். 11 மாத பயிற்சியை நிறைவு செய்து ராணுவத்தில் இணைந்து தாய்நாட்டுக்காக சேவை புரிய உள்ளார். அப்போது, நீண்ட நாட்களுக்கு பின் தனது தாயாரை ஆசையாய் காண வந்த தனது பிஞ்சு குழந்தையை, அவர் தூக்கி கொஞ்சிய காட்சி வைரலாகி வருகிறது.

அவரை போலவே, வீரமரணம் அடைந்த முன்னாள் ராணுவ அதிகாரியின் மனைவி ரிக்சின் கோரோல்(32) என்பவரும் பயிற்சியை நிறைவுசெய்தார். அவருக்கு ஒரு மகன் உள்ளார். மேலும், அவர் லடாக்கின் முதல் பெண் ராணுவ அதிகாரி ஆவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து