முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இருவிரல் சோதனை நிறுத்தப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு

திங்கட்கிழமை, 31 அக்டோபர் 2022      இந்தியா
Supreme-Court 2021 07 19

Source: provided

புதுடெல்லி : பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவர்களுக்கு இருவிரல் சோதனை நடத்துவது என்பது ஆணாதிக்கம் கொண்டது என்று காட்டமாகக் கூறியிருப்பதுடன், இந்த நடைமுறை நிறுத்தப்படுவதை மத்திய அரசு உறுதி செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

ஒருவரின் பாலியல் வரலாற்றை அறிந்து கொள்ள இருவிரல் சோதனை உதவும் என்பதற்கு இதுவரை  எந்த அறிவியல்பூர்வ உறுதித்தன்மையும் இல்லை மாறாக, இது பாதிக்கப்பட்ட நபரை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கவே செய்யும் என்றும், பாதிக்கப்பட்ட நபருக்கு எந்த தனியொருவரும் இருவிரல் சோதனை நடத்துவது என்பது, அவரை தவறாக நடத்த முயன்றவராகக் கருதுவதற்கு உரியவராகிறார் என்றும் குறிப்பிட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதி ஹிமா கோஹ்லி ஆகியோர் கொண்ட அமர்வு, பாலியல் பலாத்கார வழக்கு விசாரணையின்போது இதனைப் பதிவு செய்தனர். மேலும், பாலியல் பலாத்கார வழக்கில், குற்றவாளியை விடுதலை செய்து ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும், குற்றவாளி என்று அறிவித்து விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்.

மத்திய, மாநில அரசுகள், உடனடியாக அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி, அவர்களது மருத்துவக் கல்வியில், இருவிரல் பரிசோதனை நீக்கப்பட்டது குறித்து பதிவு செய்யுமாறு அறிவுறுத்தவும் சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தியுள்ளது. பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான பெண்களுக்கு இருவிரல் சோதனை செய்வது என்பது அவர்களது மரியாதைக்கும், தனியுரிமைக்கும் எதிரானது என்று கடந்த 2013ஆம் ஆண்டே இருவிரல் சோதனைக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து