முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா, ராகுல் மரியாதை

திங்கட்கிழமை, 31 அக்டோபர் 2022      இந்தியா
Sonia 2022-10-31

Source: provided

புதுடெல்லி : முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு நினைவிடத்தில் நேற்று சோனியா, ராகுல் காந்தி மரியாதை செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு நேரில் சென்ற காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தற்போதைய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

இதற்கிடையே, இந்திரா காந்தியின் நினைவு தினத்தையொட்டி ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், "பாட்டி, நான் உங்கள் அன்பு மற்றும் மதிப்பு இரண்டையும் என் இதயத்தில் சுமந்துகொண்டிருக்கிறேன். உங்கள் உயிரை தியாகம் செய்த இந்தியாவை சிதைக்க நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், " இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினத்தில் அவருக்கு எனது மரியாதைகள். விவசாயம், பொருளாதாரம் அல்லது ராணுவ பலம் எதுவாக இருந்தாலும், இந்தியாவை வலிமையான நாடாக மாற்றியதில் இந்திரா காந்தியின் பங்களிப்பு ஒப்பற்றது" என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து