முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புனித் ராஜ்குமாருக்கு விருது வழங்கும் விழா: தனி விமானத்தில் பெங்களூர் சென்றார் நடிகர் ரஜினிகாந்த்

செவ்வாய்க்கிழமை, 1 நவம்பர் 2022      சினிமா
Rajinikanth 2022-11-01

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக  நடிகர் ரஜினிகாந்த் தனி விமானத்தில் பெங்களூரு சென்றுள்ளார். 

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். இவர் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரின் இந்த திடீர் மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவரின் மறைவையடுத்து திரையுலகில் அவரது கலைப்பணி மற்றும் சமூக சேவை உள்ளிட்டவற்றை கருத்திற்கொண்டு அவருக்கு மிக உயரிய விருதான கர்நாடகா ரத்னா விருது வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்திருந்தார். 

அதன்படி நவம்பர் 1-ம் தேதி கன்னட ராஜ்யோத்சவா தினமான நேற்று இந்த விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ள விருது வழங்க, தமிழ் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி நடிகர் ரஜினிகாந்த் பெங்களூர் சென்றார். இந்த நிலையில், தனி விமானம் மூலமாக பெங்களூரு சென்றடைந்த நடிகர் ரஜினிகாந்தை கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் வரவேற்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து