முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த அக்டோபர் மாதம் யு.பி.ஐ. பரிவர்த்தனை 730 கோடியாக உயர்வு

செவ்வாய்க்கிழமை, 1 நவம்பர் 2022      வர்த்தகம்
UPI 2022-11-01

கடந்த அக்டோபர் மாதம் யு.பி.ஐ. பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 730 கோடியாக அதிகரித்துள்ளது. இது அதற்கு முந்தைய செப்டம்பர் மாதத்தைவிட 7.7 சதவீதம் அதிகம் ஆகும்.

இந்திய தேசிய பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் தரவுகளின்படி, கடந்த அக்டோபர் மாதத்தில் ரூ.12.11 லட்சம் கோடி மதிப்பிலான 730 கோடி யு.பி.ஐ. பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது கடந்த செப்டம்பர் மாதத்தைக் காட்டிலும் 7.7 சதவீதம் அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது. அதேவேளையில், கடந்த செப்டம்பர் மாதம் ரூ.11.16 லட்சம் கோடி மதிப்பிலான 678 கோடி யு.பி.ஐ. பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதுதவிர, கடந்த அக்டோபர் மாதம் ஐஎம்பிஎஸ் சேவை மூலம் வங்கிகள் இடையிலான உடனடி பரிவர்த்தனைகள் 48.25 கோடியாக இருந்தது. பரிவர்த்தனை செய்யப்பட்ட தொகை ரூ.4.66 லட்சம் கோடி. இது அதற்கு முந்தைய செப்டம்பர் மாதத்தில் 46.27 கோடியாகவும், ஆகஸ்ட் மாதத்தில் 46.69 கோடியாகவும் இருந்தது. மேலும், ஃபாஸ்ட்டேக் மூலம் செய்யப்படும் சுங்கக் கட்டண வசூல் அக்டோபர் மாதத்தில் ரூ.4,451.87 கோடியாக அதிகரித்துள்ளது. இது செப்டம்பர் மாதத்தில் ரூ.4,244.76 கோடியாக இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து