முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்டோபரில் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.1.51 லட்சம் கோடியாக அதிகரிப்பு: தமிழகத்தில் 25 சதவீதம் உயர்வு

செவ்வாய்க்கிழமை, 1 நவம்பர் 2022      இந்தியா      வர்த்தகம்
GST 2022-11-01

அக்டோபர் மாதம் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.1.51 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் 25 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, வரி வசூல் 2-வது முறையாக ரூ.1.50 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. நடப்பு ஆண்டு அக்டோபர் மாதத்தில் மொத்த ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1,51,718 கோடி வசூலாகியுள்ளது. அக்டோபர் மாத வசூலானது, கடந்த ஏப்ரல் மாதம் வசூலான ரூ.1,67,540 கோடிக்கு அடுத்து இரண்டாவது மிகப்பெரிய தொகையாகும்.

இதில் மத்திய சிஜி.எஸ்.டி. ஆக ரூ.26,039 கோடி, மாநில எஸ்ஜி.எஸ்.டி. ஆக ரூ.33,396 கோடி, ஒருங்கிணைந்த ஐஜி.எஸ்.டி. ஆக ரூ.81,778 கோடி (சரக்குகளின் இறக்குமதி மூலம் வசூலிக்கப்பட்ட ரூ.37,297 கோடி உள்பட), செஸ் வசூலாக ரூ.10,505 கோடி (பொருட்களின் இறக்குமதி மூலம் வசூலிக்கப்பட்ட ரூ.825 கோடி உட்பட), வசூலாகியுள்ளது.

ஜி.எஸ்.டி. வரி வசூல் தொடர்ந்து 8-வது முறையாக ரூ.1.40 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, வரி வசூல் 2-வது முறையாக ரூ.1.50 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாத ஜி.எஸ்.டி. வருவாய் வசூலுடன் ஒப்பிடுகையில், பல மாநிலங்களிலும் ஜி.எஸ்.டி. வருவாய் உயர்ந்துள்ளது.கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் நடப்பு ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வருவாய் 25 சதவீதம் உயர்ந்து ரூ.9540 கோடியாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து