முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொலை மிரட்டல் எதிரொலி: நடிகர் சல்மான் கானுக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு-அக்ஷய்குமாருக்கு ‘எக்ஸ்’ பிரிவு பாதுகாப்பு வழங்க முடிவு

செவ்வாய்க்கிழமை, 1 நவம்பர் 2022      சினிமா
Salman-Khan 2022-11-01

பாலிவுட் நடிகர் சல்மானுக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டலை தொடர்ந்து, அவருக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல்  அக்ஷய்குமாருக்கு ‘எக்ஸ்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.

பஞ்சாப் பாடகர் சித்து மூஸே வாலாவை கொலை செய்த வழக்கில் சிறையில் உள்ள லாரன்ஸ் பிஸ்னொயின் கும்பலால், கடந்த ஜூலை மாதம் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சல்மான் கானுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மும்பை காவல்துறையால் ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு அளிக்க மகாராஷ்டிர உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இதன்மூலம், சல்மான் கானுக்கு ஒரு பாதுகாப்பு அதிகாரி மற்றும் கமாண்டோக்கள் உள்பட 11 ஆயுதம் ஏந்திய வீரர்கள் பாதுகாப்பு அளிக்கவுள்ளனர். அதேபோல், கொலை மிரட்டல் காரணமாக அக்ஷய்குமார் மற்றும் அனுபம் கெர் ஆகியோருக்கும் ‘எக்ஸ்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து