முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் தொங்கு பாலம் விபத்து: உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.6 லட்சம் நிவாரண நிதி: மாநில அமைச்சர் ராஜேந்திர திரிவேதி அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 1 நவம்பர் 2022      இந்தியா
Rajendra-Trivedi 2022-11-01

குஜராத் தொங்கு பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 6 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று மாநில அமைச்சர் ராஜேந்திர திரிவேதி தெரிவித்தார். 

மோர்பி பகுதியில் மச்சு நதியின் மீது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட தொங்கு பாலம் ஞாயிற்றுக்கிழமை மாலை அதிக எடை காரணமாக அறுந்து விழுந்தது. அப்போது பாலத்தில் இருந்த நூற்றுக்கணக்கானோர் நதிக்குள் விழுந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 134-ஆக ஆனது. மேலும் காணாமல் போனவர்களைத் தேடும் பணி  நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் குஜராத் தொங்கு பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.  விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மாநில அரசு சார்பில் தலா ரூ. 4 லட்சமும் பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் என ரூ. 6 லட்சம் வழங்கப்படும் என்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என்றும் குஜராத் மாநில பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ராஜேந்திர திரிவேதி தெரிவித்தார்.  மேலும் தற்போது 17 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இன்னும் காணாமல்போன 2 பேரைத் தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து