முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

56-வது நாளை எட்டிய நடை பயணம்: தெலங்கானாவில் ராகுலுடன் நடந்த பாலிவுட் நடிகை பூஜா

புதன்கிழமை, 2 நவம்பர் 2022      இந்தியா
Rahul 2022-11-02

Source: provided

ஐதராபாத் : இந்திய ஒற்றுமை யாத்திரையின் 56-வது நாளில் நேற்று பாலிவுட் நடிகை, தயாரிப்பாளர் பூஜா பட் புதன்கிழமை பங்கேற்று சிறிது தூரம் நடந்து சென்றார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். தற்போது தெலங்கானாவில் நடைபெற்றுவரும் இந்திய ஒற்றுமை யாத்திரையின் 56 வது நாளான நேற்று (நவ.2 ஆம் தேதி) புதன்கிழமை ஐதராபாத்தில் நடந்த யாத்திரையில் பாலிவுட் நடிகை பூஜா பட் கலந்து கொண்டார். அவர் ராகுல் காந்தியுடன் இணைந்து சிறிது தூரம் நடந்து சென்றார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் வீடியோ, படங்களை வெளியிட்டு, "ஒவ்வொரு நாளும் புதிய வரலாறு உருவாக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. தினமும் இந்திய ஒற்றுமை யாத்திரை மீதான நாட்டு மக்களின் அன்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது" என்று தெரிவித்துள்ளது.

தெலாங்கனா மாநிலம் ஐதராபாத் நகரில் காலையில் நடந்த யாத்திரையின் முன்பக்கமாக இருந்து வந்த பூஜா பட், ராகுல் காந்தியுடன் கை குலுக்கிய பின்னர் அவருடன் யாத்திரையில் இணைந்து சிறிது தூரம் நடந்து சென்றார். இதன் மூலம் இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் பாலிவுட் பிரபலங்களின் வரிசையில் பூஜா பட் இணைந்துள்ளார். முன்னதாக, ஸ்வரா பாஸ்கர் ராகுல் காந்தியையும், இந்திய ஒற்றுமை யாத்திரையையும் பாராட்டி இருந்தார்.

தெலாங்கானாவில் நடைபெற்றுவரும் இந்திய ஒற்றுமை யாத்திரையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தெலங்கானா பிசிசியின் தற்போதைய தலைவருமான முகமது அசாரூதின், நடிகை பூனம் கவுர் போன்ற பிரபலங்களும் கலந்து கொண்டது குறிப்பிட்டத்தக்கது. 

முன்னதாக, செவ்வாய்க்கிழமை நடந்த யாத்திரையில் தெலங்கானாவின் பல்கலையில், அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட பட்டியலின மாணவர் ரோகித் வெமுலாவின் தாயார் ராதிகா வெமுலா இந்திய ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொண்டு ராகுல் காந்தியுடன் நடந்தார்.

கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்திய ஒற்றுமை யாத்திரை கேரளா கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம் வழியாக கடந்து தற்போது தெலங்கானாவில் நடந்து வருகிறது. இது நவ.7 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் நுழைகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து