முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்., வங்கதேசம், ஆப்கனில் இருந்து வந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு

புதன்கிழமை, 2 நவம்பர் 2022      இந்தியா
Central-government 2021 07

Source: provided

புதுடெல்லி : பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

குடியுரிமை திருத்த சட்டம்(சிஏஏ) நாடாளுமன்றத்தில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதற்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. குடியுரிமை திருத்த சட்டத்துக்கான விதிமுறைகள் வகுக்கப்படாததால், அது இன்னும் அமல்படுத்தப்படவில்லை.

கொரோனா பெருந்தொற்று காரணமாக சிஏஏ விதிமுறைகளை உருவாக்க கால தாமதம் ஆனது. இதனால் இந்த விதிமுறைகளை உருவாக்கும் நாடாளுமன்ற குழுக்களுக்கு, கால அவகாசத்தை மத்திய உள்துறை 7-வது முறையாக நீட்டித்துள்ளது. மாநிலங்களவை குழுவுக்கு டிசம்பர் 31-ம் தேதி வரையும், மக்களவை குழுவுக்கு அடுத்தாண்டு ஜனவரி 9-ம் தேதி வரையும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தின் ஆனந்த் மற்றும் மெஹ்சனா ஆகிய மாவட்டங்களில் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வந்த இந்துக்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர், ஜெயின்கள், பார்சி மற்றும் கிறிஸ்தவர்கள் தங்கியுள்ளனர். 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை வந்த இவர்களுக்கு குடியுரிமை அளிக்க மத்திய அரசு விரும்புகிறது.

குடியுரிமை திருத்த சட்டம், 2019 (சிஏஏ) விதிமுறைகள் இன்னும் உருவாக்கப்படாததால், இவர்களுக்கு குடியுரிமை சட்டம், 1955 ஐந்தாவது பிரிவின் கீழ் குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் தங்கள் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதை மாவட்ட ஆட்சியர் சரிபார்த்து குடியுரிமை சான்றிதழ் வழங்குவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து