முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிச்சயமற்ற தன்மை இருந்தாலும் உலகளவில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது: பிரதமர்

புதன்கிழமை, 2 நவம்பர் 2022      இந்தியா
Modi 2022-11-02

Source: provided

பெங்களூரு : நிச்சயமற்ற தன்மை இருந்தாலும் உலகளவில் இந்தியா வேகமாக முன்னேறி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களுருவில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு 3 நாட்கள் நடக்கிறது. இந்த மாநாட்டை நேற்று பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:-

உலகளவில் பொருளாதாரம் நிச்சயமற்ற தன்மையில் இருக்கும் இந்த நேரத்தில் இந்திய பொருளாதாரம் வலுவாக இருப்பதை பார்த்து உலகமே நம் மீது நம்பிக்கை வைத்துள்ளது. இந்தியா உலகளாவிய உற்பத்தி சக்தியாக உருவாகி வருகிறது. இந்தியாவில் முதலீடு செய்வது என்பது ஜனநாயகத்தின் முதலீடு, உலகத்திற்கான முதலீடு. இந்தியாவில் அன்னிய முதலீட்டுக்கான கதவுகள் திறந்தே உள்ளன.

கடந்த 8 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன. உலகளவில் நிச்சயமற்ற தன்மை இருந்தாலும் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. துணிச்சலான சீர்திருத்தங்கள், பெரிய உள்கட்டமைப்பு, சிறந்த திறமைகளுடன் புதிய இந்தியாவை நோக்கி நகர்ந்து வருகிறோம். நாட்டின் முன்னேற்றத்திற்காக இதில் கவனம் செலுத்தப்படுகிறது.

திறமை மற்றும் தொழில்நுட்பம் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது பெங்களூருதான். பாரம்பரியம் மற்றும் தொழில்நுட்பம் இரண்டும் உள்ள இடம் அது. இந்திய இளைஞர்களின் திறமையை உலகமே வியந்து பார்க்கிறது.

இளைஞர்களின் திறனை கட்டுப்படுத்துவதில் புதிய வாய்ப்புகளை ஆராய்வதற்கான சூழலை தருவோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன். பியூஷ்கோயல், பிரகலாத் ஜோஷி,ராஜூவ் சந்திரசேகர் உள்ளிட்ட வர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து