முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடை பயணத்தின் போது பழங்குடியின மக்களுடன் நடனமாடிய ராகுல் காந்தி

வியாழக்கிழமை, 3 நவம்பர் 2022      இந்தியா
Rahul-Gandhi-2022-11-03

நடைபயணத்தின்போது பழங்குடியின மக்களுடன் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, அவரகளின் பாரம்பரிய நடனமாடிய விடியோ சமூக தளங்களில் வைரலாகி வருகின்றது.

ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஒற்றுமைக்கான நடைபயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடைபயணமானது தமிழகத்தில் தொடங்கி கேரளம், கர்நாடகம், ஆந்திரத்தை கடந்த தற்போது தெலங்கானாவில் நடைபெற்று வருகின்றது. நேற்று காலை நடைபயணம் மேற்கொண்ட போது, தெலங்கானா, ஆந்திரம், ஒடிசாவில் வாழும் பழங்குடியின மக்களின் பாரம்பரிய ‘திம்சா’ நடனத்தை அவர்களுடன் இணைந்து ஆடினார்.

பழங்குடியின மக்களுடன் இணைந்து அவர்களின் பாரம்பரிய நடனம் ஆடிய காணொளி தற்போது வைரலாக தொடங்கியுள்ளது. ஏற்கெனவே கேரளத்தில் படகு போட்டி, நடைபயணத்தின்போது குழந்தைகளுடன் ஓடுவது, கால்பந்து விளையாடுவது என அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து