முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2023 மார்ச்-க்குள் புதிதாக 25 வந்தே பாரத் ரயில்கள்: இந்திய ரயில்வே திட்டம்

வியாழக்கிழமை, 3 நவம்பர் 2022      இந்தியா
Vande-Bharat-train-2022-11-

இந்திய ரயில்வே வரும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் புதிதாக 25 வந்தே பாரத் ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வந்தே பாரத் விரைவு ரயில்கள், வேகம், பாதுகாப்பு மற்றும் பயணிகளிக்குச் சிறந்த பயணத்தை அளிக்கும் வகையில் இயக்கப்படவிருக்கின்றன. இந்த நிதியாண்டில் மட்டும், சென்னையில் உள்ள ரயில் பெட்டிகள் தயாரிப்புத் தொழிற்சாலையில் 27 வந்தே பாரத் விரைவு ரயில்களைத் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், ஏற்கனவே இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கத்தைத் தொடங்கிவிட்டன.  இவைகள்தான் மாடுகள் முட்டி முன்பக்கம் சேதமானவை.

மூன்றாவது வந்தே பாரத் ரயில் தற்போது தயாரிப்பில் இருக்கிறது. இன்னும் ஒரு சில நாள்களில் தயாராகிவிடும் என்று கூறப்படுகிறது. இந்த மூன்றாவது ரயில், சென்னை - மைசூரு இடையே பெங்களூரு வழியாக இயக்கப்படவிருப்பதாகத் தெரிகிறது. முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட, இருக்கைகள் அமைக்கப்பட்ட இந்த ரயில்கள், மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

சா்வதேச தரம் வாய்ந்த பயண அனுபவத்தையும் விமானத்தில் பயணிப்பது போன்ற அனுபவத்தையும் ‘வந்தே பாரத்’ ரயில் பயணிகளுக்கு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது. முழுவதும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளைக் கொண்ட வந்தே பாரத் ரயிலில் தானியங்கி கதவுகள், தானியங்கி விளக்குகள், கைப்பேசி சார்ஜ் செய்யும் வசதிகள், கண்காணிப்பு கேமராக்கள், நவீன இருக்கைகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து