முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் தொங்கு பால விபத்து: அனைத்து உடல்களும் மீட்பு

வியாழக்கிழமை, 3 நவம்பர் 2022      இந்தியா
Gujarat-Bridge 2022-11-03

குஜராத் மாநிலத்தின் மோர்பியில் நிகழந்த பால விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் அனைத்தும் மீட்கப்பட்டுவிட்டதாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மோர்பியில் உள்ள மச்சு நதியின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 142 பேர் உயிரிழந்தனர். 100 பேர் காயமடைந்தனர். அனைவரின் உடல்களும் மீட்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவரை காணவில்லை என்று தகவல் கிடைத்தது. எனினும் தேடும் பணி தொடங்குவதற்குள், அது தவறான தகவல் என்று தெரிய வந்தது. இதையடுத்து, பலியான அனைவரின் உடல்களும் மீட்கப்பட்டுவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புதன்கிழமை மாநில அளவிலான துக்கம் கடைப்பிடிக்கப்பட்டது. தேசியக் கொடி அரைக் கம்பங்களில் பறக்க விடப்பட்டது. அனைத்து அரசுசார் நிகழ்ச்சிகளும் கேளிக்கை நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து