முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துணைவேந்தர் நியமன விவகாரம்: பினராய் விஜயனுக்கு கேரள கவர்னர் சவால்

வியாழக்கிழமை, 3 நவம்பர் 2022      இந்தியா
Aarif-Mohamad-khan 2022-11-03

Source: provided

புதுடெல்லி: துணைவேந்தர் நியமனத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் கவர்னர் குறுக்கிடுவதாகக் குற்றம்சாட்டும் கேரள முதல்வர் பினராயி விஜயன், ஏதேனும் ஓர் உதாரணத்தைக் காட்டட்டும், நான் பதவி விலகுகிறேன்” என அம்மாநில கவர்னர் ஆரிஃப் முகம்மது கான் சவால் விடுத்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் கடந்த புதன்கிழமை (நவ.2) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் பினராயி விஜயன், கேரளாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்க பரிவார் அமைப்புகளின் மையங்களாக மாற்ற கவர்னர் முயல்வதாகக் குற்றம்சாட்டி இருந்தார்.

இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டுக்கு புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கவர்னர் ஆரிஃப் முகம்மது கான் பதில் அளித்தார். அவர் கூறியதாவது: “கேரள பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிகளுக்கு ஆர்.எஸ்.எஸ் நபர்களைக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே, தற்போதைய துணைவேந்தர்களுக்கு எதிராக நான் செயல்படுவதாக முதல்வர் கூறி இருக்கிறார்.

கடந்த 3 ஆண்டுகளில் நான், எனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ் நபர் மட்டுமல்ல வேறு யாராவது ஒருவரையாவது அவ்வாறு நியமித்திருக்கிறேனா என்று முதல்வரை கேட்க விரும்புகிறேன். அவ்வாறு நான் நியமித்திருப்பதாக ஒரு உதாரணத்தையாவது அவர் காட்ட வேண்டும். அவ்வாறு அவர் காட்டினால் நான் கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிடுகிறேன். அதேநேரத்தில், அவ்வாறு காட்ட முடியாவிட்டால், அவர் பதவி விலகத் தயாரா? எனக்கு எதிராக மிகப் பெரிய குற்றச்சாட்டை கூறும் அவர், ஆதாரத்துடன் பேச வேண்டும்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அச்சம் நிறைந்த ஆட்சி நடக்கிறது. தங்கக் கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயன் மீது நான் எந்தக் குற்றச்சாட்டும் கூறவில்லை. அதேநேரத்தில், இந்த வக்கில் அவர் பதில் அளிக்க வேண்டிய கேள்விகள் இருக்கின்றன. தங்க கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட குற்றச்சாட்டின் கீழ் முதல்வரின் செயலாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். முதல்வருக்குத் தெரியாமல்தான் இது நடந்ததா? அவருக்குத் தெரியாமல்தான் இது நடந்தது எனில் முதல்வரின் திறன் குறித்த கேள்வி எழுகிறது.

தங்கக் கடத்தலுக்கு உறுதுணைபுரிந்தவர்கள் முதல்வர் அலுவலகத்தில் இருந்திருக்கிறார்கள். ஒவ்வொருவரும் அவரவருக்கான எல்லையை உணர்ந்து செயல்பட வேண்டும். கவர்னரின் அழைப்பை முதல்வர் நிராகரித்துள்ளார். இதன்மூலம் அவர் எல்லையை மீறி உள்ளார்” என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து