முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க பெண் சபாநாயகர் நான்சி பெலோசியின் கணவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்

வெள்ளிக்கிழமை, 4 நவம்பர் 2022      உலகம்
Paul-Pelosi 2022-11-04

சுத்தியலால் தாக்கப்பட்ட அமெரிக்க பெண் சபாநாயகரின் கணவர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார். 

அமெரிக்க நாடாளுமன்ற பெண் சபாநாயகர் நான்சி பெலோசி. நான்சி பெலோசியின் வீடு, சான் பிரான்சிஸ்கோவில் உள்ளது. கடந்த மாதம் 28-ம் தேதி அன்று காலையில், அந்த வீட்டுக்குள் ஒரு மர்ம நபர் அத்துமீறி நுழைந்து நான்சி பெலோசியின் கணவர் பால் பெலோசியை சுத்தியலால் கை, கால்கள், தலையில் கடுமையாக தாக்கி விட்டு தப்பிச் சென்றார். 

இந்த சம்பவத்தின் போது, நான்சி பெலோசி, வீட்டில் இல்லை. காயமடைந்த பால் பெலோசி, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 82 வயதான பால் பெலோசி, ஜுக்கர்பெர்க் சான் பிரான்சிஸ்கோ பொது மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அவர் விரைவில் குணமடைவார் என்று எதிர்பார்ப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.  இந்நிலையில், கடந்த வாரம் அனுமதிக்கப்பட்ட பால் பெலோசி, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து