முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரீஸ் படகு விபத்து: 22 உடல்கள் மீட்பு

வெள்ளிக்கிழமை, 4 நவம்பர் 2022      உலகம்
Grees-boat 2022-11-04

கிரீஸ் அருகே நிகழ்ந்த படகு விபத்தில் 22 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 

கிரீஸ் அருகே அளவுக்கு அதிகமான அகதிகளை ஏற்றி வந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான பகுதியிலிருந்து 22 உடல்கள் மீட்கப்பட்டன. இது தவிர, விபத்தில் மாயமான மேலும் 34 பேரை மீட்கும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

இது குறித்து கடலோரக் காவல் படை அதிகாரிகள் கூறுகையில், தலைநகா் ஏதென்சுக்கு அருகே உள்ள எவியா, ஆண்ட்ரோஸ் ஆகிய இரு தீவுகளுக்கு இடையே கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்து கொண்டிருந்த அகதிகள் படகு, அளவுக்கு அதிகமாக ஆள்கள் ஏற்றப்பட்டிருந்ததால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  விபத்துப் பகுதியையொட்டி இருந்த, ஆளில்லா தீவிலிருந்து 9 பேரை மீட்புக் குழுவினர் மீட்டனா். அதன் பிறகு விபத்தில் மாயாமான சுமார் 60 பேரைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடந்து வந்தன. இதில் மேலும் 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 

விபத்துப் பகுதியிலிருந்து இதுவரை 22 உடல்கள் மீட்கப்பட்டன. உயிரிழந்த 22 பேரில் 5 சிறுவா்களும் அடங்குவர்.  விபத்தில் மாயமான மேலும் 34 பேரைத் தேடும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.  வறுமை மற்றும் போரால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்கா, ஆசிய நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் தேடி ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான அகதிகள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிர்ச்சேதம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து