முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாசாவின் ஆர்டெமிஸ் ராக்கெட் ஏவும் தேதி மீண்டும் அறிவிப்பு

சனிக்கிழமை, 5 நவம்பர் 2022      உலகம்
NASA 2022-11-05

Source: provided

புளோரிடா : நிலவை ஆய்வு செய்வதற்கான நாசாவின் ஆர்டெமிஸ் ராக்கெட் ஏவும் தேதி மீண்டும் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பு நிலவு மற்றும் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நிலவுக்கு ஆர்டெமிஸ் 1 என்ற ராக்கெட் அனுப்பும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்த ராக்கெட்டில் ஆட்கள் யாரும் செல்லவில்லை. 

2025-ம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள நாசா தற்போது ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக அனுப்ப உள்ளது. கடந்த ஆகஸ்டு 29-ம் தேதி இந்திய நேரப்படி மாலை 6 மணியளவில் ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்பும் பணி தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால், சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டதன் காரணமாக 40-வது நிமிடத்தின் போது கவுன்ட்-டவுன் நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, ஆர்ட்டெமிஸ்-1 திட்ட ஹைட்ரஜன் குழு, ராக்கெட் ஏவுதல் இயக்குனருடன் அடுத்தகட்ட நடவடிக்கைகளை பற்றி விவாதித்தனர். 

இந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்ட நிலையில் ஆர்டெமிஸ் 1 ராக்கெட் மீண்டும் செப்டம்பர் 3-ம் தேதி விண்ணில் ஏவப்படும் என கூறப்பட்டது. எனினும், இந்த திட்டம் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது.  அதை தொடர்ந்து அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஆற்றல் வாய்ந்த ஐயான் என்ற சூறாவளி தாக்க உள்ளது என தகவல் வெளியானது. இது இந்த ராக்கெட் செலுத்த கூடிய பகுதியை கடந்து செல்ல கூடும் என்றும் கூறப்பட்டது. இதனால், ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து அதனை பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு சென்றனர். சூறாவளி புயல், எரிபொருள் கசிவு உள்ளிட்ட காரணங்களுக்காக 3 முறை இந்த பயண திட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து, அக்டோபர் 17-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையிலும் மற்றும் நவம்பர் 12-ம் தேதி முதல் 27-ம் தேதி வரையிலும் என இரண்டு காலகட்டங்களில் ஒன்றை நாசா தேர்வு செய்யும் என கூறப்பட்டது. இந்த நிலையில், அக்டோபர் கடந்து நவம்பர் மாதம் வந்துள்ள சூழலில், வரும் 14-ம் தேதி ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை செலுத்துவது என நாசா அமைப்பு முடிவு செய்துள்ளது. 

இதன்படி, அன்று அதிகாலை 12.07 மணியளவில் ராக்கெட்டை செலுத்தவும், அதனை லைவ் நிகழ்ச்சியாக நாசா வலைதளத்தில் வெளியிடவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து ராக்கெட்டை செலுத்தும் ஏவுதளத்துக்கு ராக்கெட்டை கொண்டு வந்துள்ளனர். தொடர்ந்து 3 முறை ஆர்டெமிஸ் 1 ராக்கெட் ஏவும் திட்டம் தள்ளி வைக்கப்பட்டு உள்ள சூழலில், இந்த முறை அந்த முயற்சி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து