முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காற்று மாசு அதிகரிப்பு: டெல்லியில் டீசல் லாரி நுழைய தடை

சனிக்கிழமை, 5 நவம்பர் 2022      இந்தியா
Delhi-Lorry 2022-11-05

Source: provided

புதுடெல்லி : காற்று மாசு அதிகரிப்பால் டெல்லியில் டீசல் லாரி நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவது அம்மாநில பொதுமக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. அண்டை மாநிலமான பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் விவசாய கழிவுகளை தொடர்ந்து எரித்து வருவதால் இந்த காற்று மாசு உருவாகி வருகிறது. இதையடுத்து இன்று முதல் தொடக்கபள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் வீட்டில் இருந்தபடி பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

காற்று மாசு அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த டெல்லி நகருக்குள் டீசல் லாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வரும் லாரிகளுக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. கியாஸ் மற்றும் மின்சார வாகனங்கள் மட்டும் டெல்லிக்குள் வர அனுமதிக்கபடுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து